Thursday, May 27, 2010

பாதை காட்டும் மா யெகோவா பாமாலை 324

1.பாதை காட்டும் மா யெகோவா,

பரதேசியான நான்

பலவீனன், அறிவீனன் ,

இவ்வுலோகம் காடு தான்,

வானாகரம்

தந்து என்னைப் போஷியும்.



2.ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றை

நீர் திறந்து தாருமேன் ;

தீப மேக ஸ்தம்பம் காட்டும்.

வழியில் நடத்துமேன் ;

வல்ல மீட்பர் !

என்னைத் தாங்கும், இயேசுவே.



3.சாவின் அந்தகாரம் வந்து

என்னை மூடும் நேரத்தில்

சாவின் மேலும் வெற்றித் தந்து ,

என்னை சேர்ப்பீர் மோட்சத்தில் ;

கீத வாழ்த்தல்

உமக்கென்றும் பாடுவேன் .



Wednesday, May 26, 2010

கர்த்தாவை நல்ல பக்தியாலே பாமாலை 322

1.கர்த்தாவை நல்ல பக்தியாலே

எப்போதும் நம்பும் நீதிமான்

எத்தீங்கிலும் அவராலே

அன்பைக் காப்பற்றப்படுவான் ;

உன்னதமான கர்த்தரை

சார்ந்தோர்க்கவர் கன்மலை .

2.அழுத்தும் கவலைகளாலே

பலன் ஏதாகிலும் உண்டோ?

நாம் நித்தம் சஞ்சலத்தினாலே

தவிப்பது உதவுமோ ?

விசாரத்தாலே நமக்கு

இக்கட்டதிகரிக்கது .

3.உன் காரியத்தை நலமாக

திருப்ப வல்லவர்க்கு

நீ அதை ஒப்புவிப்பாயாக ;

விசாரிப்பார் ,அமர்ந்திரு ,

மா திட்டமாய்த் தயாபரர்

உன் தாழ்ச்சியை அறிந்தவர் .

4.சந்தோஷிப்பிக்கிறதான

நாள் எதென்றவர் அறிவார் ;

அநேக நற்குணங்கள் காண

அந்தந்த வேளை தண்டிப்பார் ,

தீவிரமாய்த் திரும்பவும்

தெய்வன்பு பூரிப்பைத் தரும் .

4.நீ கர்த்தரால் கைவிடப்பட்டோன்

என்றாபத்தில் நினையாதே ;

எப்போதும் பாடும் நோவுமற்றோன்

பிரிய னென்றும் எண்ணாதே ;

அநேக காரியத்துக்கு

பின் மாறுதல் உண்டாகுது .

5.கதியுள்ளோனை ஏழையாக்கி

மகா எளியவனையோ

திரவிய சம்பன்னணாக்கி

உயர்த்த ஸ்வாமிக்கரிதோ ?

தாழ்த்துவார் ,உயர்த்துவார்

அடிக்கிறார் ,அணைக்கிறார் .

7.மன்றாடி பாடி கிரிஸ்தோனாக

நடந்து கொண்டுன் வேலையை

நீ உண்மையோடே செய்வாயாக ;

அப்போ தெய்வாசீர்வாதத்தை

திரும்பக் காண்பாய் ; நீதிமான்

கர்த்தாவால் கைவிடப்படான்

Tuesday, April 13, 2010

நீரோடையை மான் வாஞ்சித்து பாமாலை 375

பாமாலை 375
1 நீரோடையை மான் வாஞ்சித்து

கதறும் வண்ணமாய் ,

என் ஆண்டவா , என் ஆத்துமம்

தவிக்கும் உமக்காய் .

2. தாள கர்த்தா, உமக்காய்

என் உள்ளம் ஏங்காதோ ?

உம மாட்சியுள்ள முகத்தை

எப்போது காண்பேனோ?

3.என் உள்ளமே . விசாரம் ஏன்?

நம்பிக்கை கொண்டு நீ

சதா ஜீவ ஊற்றேயாம்

கர்த்தாவை ஸ்தோத்தரி.

4. நாம் வாழ்த்தும் கர்த்தனார் பிதா

குமாரன், ஆவிக்கும்,

ஆதி முதல் என்றென்றுமே

துதி உண்டாகவும்.

இயேசு எங்கள் மேய்ப்பர் பாமாலை 237

1.இயேசு எங்கள் மேய்ப்பர் ,
கண்ணீர் துடைப்பார் ;
மார்பில் சேர்த்தணைத்து
பயம் நீக்குவார் ;
துன்பம் நேரிட்டாலும் ,
இன்பம் ஆயினும் .
எசுவின்பின் செல்வோம்
பாளர் யாவரும் .
2. நல்ல மேய்ப்பர் சத்தம்
நன்றாய் அறிவோம் ;
காதுக்கின்பமாக
கேட்டுக் களிப்போம் ;
கண்டித்தாலும், நேசர்
ஆற்றித் தேற்றுவார் ;
நாங்கள் பின்னே செல்ல
வழி காட்டுவார்.

3. ஆட்டுக்காக மேய்ப்பர்
ரத்தம் சிந்தினார்;
அதில் மூழ்கினோரே
தூயர் ஆகுவார்;
பாவ குணம் நீக்கி
முற்றும் ரட்சிப்பார்!
திவ்விய தூய சாயல்
ஆக மாற்றுவார் .

4.இயேசு நல்ல மேய்ப்பர்
ஆட்டைப் போஷிப்பார் !
ஓநாய்கள் வந்தாலும்
தொடவே ஒட்டார் ,
சாவின் பள்ளத்தாக்கில்
அஞ்சவே மாட்டோம் ,
பாதாளத்தின் மேலும்
ஜெயங்கொள்ளுவோம்

என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே பாமாலை 189

1.என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே ;
உம பாதத்தண்டை நிற்கிறேன் ;
திக்கற்ற பிள்ளை கெஞ்சவே ,
தள்ளாமல் சேர்த்துக் கொள்ளுமென் .

2. என் கிரியைகள் எம்மாத்திரம் ?
பிரயாசை எல்லாம் விருதா '
உம்மாலேயே மெய்ப் பாக்கியம்
உண்டாகும் நேச ரட்சகா .

3. உந்தன் சரீரம் ரத்தமும்
மெய்ப் பொருள் என்று அறிவேன் ;
உட்கொண்டன்பாய் அருந்தவும்,
நன் பரவசமாகுவேன்.

4. மாசற்ற திரு ரத்தத்தைக்
கொண் டென்னைச் சுத்திகரியும் ;
மா திவ்விய ஜீவா அப்பத்தை
என் நெஞ்சில் தந்தருளும் .

5 . என் நாதா, உம ஸரிரமாஎ
மேலான திவ்விய போஜனம்;
மாசற்ற உந்தன் ரத்தமே
மையான பான பாக்கியம்

. உன்னதம், ஆழம், எங்கேயும் பாமாலை 3

பாமாலை
1. உன்னதம், ஆழம், எங்கேயும்
தூயர்க்கு ஸ்தோத்திரம் ;
அவரின் வார்த்தை, செய்கைகள்
மிகுந்த அற்புதம்.

2. பாவம் நிறைந்த பூமிக்கு,
இரண்டாம் ஆதாமே,
போரில் சகாயராய் வந்தார்
ஆ, நேச ஞானமே !

3. முதல் ஆதாமின் பாவத்தால்
விழுந்த மாந்தர் தாம்
ஜெயிக்கத் துணையாயினார்;
ஆ ஞான அன்பிதாம் !

4. மானிடர் சுபாவம் மாறவே ,
அருளைப் பார்க்கிலும்
சிறந்த ஏது தாம் என்றே
ஈந்தாரே தம்மையும்

5. மானிடனாய் மானிடர்க்காய்
சாத்தானை வென்றாரே;
மானிடனாய் எக்கஸ்தியும்
பட்டார் பேரன்பிதே!

6. கெத்செமெனெயில், குருசிலும்
வேதனை சகித்தார்
நாம் அவர் போன்றே சகித்து
மரிக்க கற்பித்தார் .

7. உன்னதம், ஆழம், எங்கேயும்
தூயர்க்கு ஸ்தோத்திரம் ;
அவரின் வார்த்தை, செய்கைகள்
மிகுந்த அற்புதம்

உம்மாலே தான் என் ஏசுவே பாமாலை 188

1 . உம்மாலே தான் என் ஏசுவே,
ரட்சிக்கப்படுவேன்;
உம்மாலே தான் பேரின்பத்தை
அடைந்து

2 . இப்பத்தியில் நீர் ஈவது ,
பரம அமிர்தம்;
இனி நான் பெற்றுக் கொள்வது
அனந்த பாக்கியம் .

3 .இவ்வேழை அடியேனுக்கு
சந்தோஷத்தை தந்தீர்;
இக்கட்டு வரும் பொழுது ,
நீர் என்னைத் தேற்றுவீர் .

4.பூமியில் தங்கும் அளவும்
உம்மையேப் பற்றுவேன் ;
எவ்வேளையும் எவ்விடமும்
நான் உம்மைப் போற்றுவேன்