Showing posts with label இ வரிசை பாடல்கள். Show all posts
Showing posts with label இ வரிசை பாடல்கள். Show all posts

Friday, June 25, 2010

இயேசு நாதா காக்கிறீர்

1.இயேசு நாதா! காக்கிறீர் ,
இளைப்பாறச் செய்கிறீர் ,
மோசம் நேரிடாமலும் ,
பாதம் இடறாமலும்,
என்னைத் தாங்கி நிற்கிறீர் ;
நேச நாதா காக்கிறீர்.

2.வாரிபோன்ற லோகத்தில்
யாத்திரை செய்து போகையில் ,
சூறைக்காற்று மோதினும் ,
ஆழி கோஷ்டமாயினும்,
அமைதல் உண்டாக்குவீர் !
நேச நாதா காக்கிறீர் !

3.சற்று தூரம் செல்லவே ,
மோட்ச கரை தோன்றுமே !
துன்பம் நீங்கி வாழுவேன் ;
இன்பம் பெற்று போற்றுவேன் ;
அதுமட்டும் தாங்குவீர் ;
நேச நாதா காக்கிறீர் .

Wednesday, June 2, 2010

இயேசு ஸ்வாமி ,உமது வசனத்தின்

1.இயேசு ஸ்வாமி,உமது
வசனத்தின் பாலைத் தேட
வந்தோம்; எங்கள் மனது
மண்ணைவிட்டு உம்மைச் சேர
எங்கள் சிந்தையை நீர் முற்றும்
தெய்வ சொல்லுக்குட்படுத்தும் .

2.உமதாவி யெங்களில்
அந்தகாரத்தை அறுத்து
ஒளியை வீசிராகில்,
புத்திக் கண்ணெல்லாம் இருட்டு ;
சீர் உண்டாக்கும் நற்சிந்திப்பு
உம்முடைய நடப்பிப்பு .

3. மகிமையின் ஜோதியே ,
ஸ்வாமி , நாங்கள் மாயமற
பாடிக் கெஞ்சி , நெஞ்சிலே
வசனத்தைக் கேட்டுணர
வாய் செவி மனமும் கண்ணும்
திரவுண்டுபோகப் பண்ணும்.

Tuesday, April 13, 2010

இயேசு எங்கள் மேய்ப்பர் பாமாலை 237

1.இயேசு எங்கள் மேய்ப்பர் ,
கண்ணீர் துடைப்பார் ;
மார்பில் சேர்த்தணைத்து
பயம் நீக்குவார் ;
துன்பம் நேரிட்டாலும் ,
இன்பம் ஆயினும் .
எசுவின்பின் செல்வோம்
பாளர் யாவரும் .
2. நல்ல மேய்ப்பர் சத்தம்
நன்றாய் அறிவோம் ;
காதுக்கின்பமாக
கேட்டுக் களிப்போம் ;
கண்டித்தாலும், நேசர்
ஆற்றித் தேற்றுவார் ;
நாங்கள் பின்னே செல்ல
வழி காட்டுவார்.

3. ஆட்டுக்காக மேய்ப்பர்
ரத்தம் சிந்தினார்;
அதில் மூழ்கினோரே
தூயர் ஆகுவார்;
பாவ குணம் நீக்கி
முற்றும் ரட்சிப்பார்!
திவ்விய தூய சாயல்
ஆக மாற்றுவார் .

4.இயேசு நல்ல மேய்ப்பர்
ஆட்டைப் போஷிப்பார் !
ஓநாய்கள் வந்தாலும்
தொடவே ஒட்டார் ,
சாவின் பள்ளத்தாக்கில்
அஞ்சவே மாட்டோம் ,
பாதாளத்தின் மேலும்
ஜெயங்கொள்ளுவோம்