Showing posts with label உ வரிசை பாடல்கள். Show all posts
Showing posts with label உ வரிசை பாடல்கள். Show all posts

Friday, June 25, 2010

உன் நெஞ்சிலே உண்டான விசாரங்களை

1.உன் நெஞ்சிலே உண்டான விசாரங்களை நீ
கர்த்தாவின் உண்மையான கரத்துக்கொப்புவி ;
விண்மனை ஆண்டிருக்கும் மகா தயாபரர்
உன் காரியங்களுக்கும் வழியுண்டாக்குவார்.


2.ஜெயமடைந்து வாழ கர்த்தாவைப் பிள்ளை போல்
நீ நம்பி மனதார பணிந்து பற்றிக்கொள்.
உன் கவலைகளாலே பயம் ரட்டிக்குது;
வேண்டாம் ,ஜெபத்தினாலே நீ வேண்டிக்கொண்டிரு .

3.ஏழை அடியாருக்கு பிதாவாம் தேவரீர்
இன்னின தெங்களுக்கு வேண்டும் என்றறிவீர் ;
நீர் எதை நல்லதாக கண்டீரோ , அதை நீர்
உம் வேளை பலமாக வர விடுகிறீர் .

4.பல வழிவகையும் உம்மாலே ஏற்படும் ;
நீர் செய்வது இசையும் , நீர் சொன்னது வரும்;
நீர் வாக்குத்தத்தமாக பொழிந்தவை எல்லாம்
உம்மாலே திட்டமாக நற்காலத்தில் உண்டாம்.

5.இக்கட்டுகளினாலே கலங்கினோனே , நீ
திடன் கொள் ,கர்த்தராலே இக்கட்டான ராத்திரி
சந்தோஷமாக மாறும் ,சற்றே பொறுத்திரு ;
நீ பூரிப்பாய் கொண்டாடும் நாள் வரப்போகுது .

5.உன் கவலைகளுக்கு இன்றே விடை கொடு;
இனிவிசாரத்துக்கு இடங்கொடாதிரு ;
நீ ஆளும் தெய்வமல்ல , நீ பூச்சி யென்றறி;
சருவத்திற்கும் வல்ல கர்த்தர் அதிபதி .

6.நீ பக்தியை விடாமல் பொறுத்திருக்கையில்
கர்த்தர் நீ நினையாமல் இருக்கும் நேரத்தில்
உன் துக்கத்தை அகற்ற வெளிச்சம் காண்பிப்பார் ;
நீ நன்மைக்காகப் பட்ட சலிப்பை நீக்குவார் .

7.அட்சணமே பலத்த ஜெயமும் பூரிப்பும்
ஆசிர்வதிக்கப்பட்ட தெய்வீகத் தேற்றலும்
அடைந்து இன்பமான மன மகிழ்ச்சியாய்
அன்புள்ள மீட்பரான கர்த்தாவைப் பாடுவாய் .

8.கர்த்தாவே, எங்களுக்கு எல்லா இக்கட்டிலும்
ரட்சிப்பளிப்பதற்கு நேரிட்டுக்கொண்டிரும் ;
ஆ, எங்களைத் தேற்றிடும்;பரகதிக்குப் போம் ,
வழியிலும் நடத்தும் , அப்போ பிழைக்கிறோம் .

Tuesday, April 13, 2010

. உன்னதம், ஆழம், எங்கேயும் பாமாலை 3

பாமாலை
1. உன்னதம், ஆழம், எங்கேயும்
தூயர்க்கு ஸ்தோத்திரம் ;
அவரின் வார்த்தை, செய்கைகள்
மிகுந்த அற்புதம்.

2. பாவம் நிறைந்த பூமிக்கு,
இரண்டாம் ஆதாமே,
போரில் சகாயராய் வந்தார்
ஆ, நேச ஞானமே !

3. முதல் ஆதாமின் பாவத்தால்
விழுந்த மாந்தர் தாம்
ஜெயிக்கத் துணையாயினார்;
ஆ ஞான அன்பிதாம் !

4. மானிடர் சுபாவம் மாறவே ,
அருளைப் பார்க்கிலும்
சிறந்த ஏது தாம் என்றே
ஈந்தாரே தம்மையும்

5. மானிடனாய் மானிடர்க்காய்
சாத்தானை வென்றாரே;
மானிடனாய் எக்கஸ்தியும்
பட்டார் பேரன்பிதே!

6. கெத்செமெனெயில், குருசிலும்
வேதனை சகித்தார்
நாம் அவர் போன்றே சகித்து
மரிக்க கற்பித்தார் .

7. உன்னதம், ஆழம், எங்கேயும்
தூயர்க்கு ஸ்தோத்திரம் ;
அவரின் வார்த்தை, செய்கைகள்
மிகுந்த அற்புதம்

Thursday, November 12, 2009

உன்னதரே நீர் மகிமை பாமாலை 4

1.உன்னதரே நீர் மகிமை,
இந்நிலம் சமாதானத்தை
அடைய அன்பு ஓங்க!
பரபரனார் கர்த்தாவே ,
பரம ராஜர் பார்த்தாவே,
வல்லமை தந்தாய், வாழ்க !
தாழ்ந்து வீழ்ந்து ,
போற்றுவோமே புகழ்வோமே
தொழுவோமே;
மாட்சி மேன்மைகென்றும்
ஸ்தோத்ரம் .

2.பிதாவின் ஒரே மைந்தனே
சுதாவே கர்த்தா ராஜரே,
தெய்வாட்டுக்குட்டி நீரே :
பார் மாந்தர் போக்கிடும்,
மா தந்தை பக்கல் ஆண்டிடும்
மகத்துவ கிறிஸ்து நீரே ;
கேட்பீர் ஏற்பீர்
ஏழை நீசர் எங்கள் ஜெபம் தாழ
வாம் வேண்டல் ;
இறங்குவீர் தயவாவடே .

3.நீர் தூயர் தூயர் தூயரே
நீர் கர்த்தர் கர்த்தர் கர்த்தரே ,
என்றென்றும் ஆள்வீர் நீரே;
பிதாவின் ஆசனத்திலே
மேதையாய் வீற்றுப் பாங்கினில்
கர்த்தாவாம் ஆவியோடே
இன்றும் என்றும்
ஏக மாண்பு ஏக மாட்சி ஏக
மேன்மை
தாங்கி ஆள்வீர் தேவரீரே .

Monday, November 9, 2009

உம்மைத் துதிக்கிறோம்

பாமாலை 2
1. உம்மைத் துதிக்கிறோம் ,யாவுக்கும் வல்ல பிதாவே ;
உம்மைப் பணிகிறோம் ஸ்வாமீ, ராஜாதி ராஜாவே;
உமது மா மகிமைக்காக கர்த்தா ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே .

2.கிறிஸ்துவே, இரங்கும் சுதனே, கடன் செலுத்தி,
லோகத்தின் பாவத்தை நீக்கும் தெய்வாட்டுக்குட்டி,
எங்கள் மனு கேளும் பிதாவினது ஆசனத் தோழா இரங்கும்.

3. நித்திய பிதாவின் மகிமையில் ஏசுவே
நீரே பரிசுத்தாவியோடேகமாய் ஆளுகிறீரே.
ஏகமாய் நீர் அர்சிக்கப்படுகிறீர்.உன்னத கர்த்தரே ஆமேன்