Showing posts with label அ வரிசை பாடல்கள். Show all posts
Showing posts with label அ வரிசை பாடல்கள். Show all posts

Friday, June 25, 2010

அன்போடு எம்மைப் போஷிக்கும்

1.அன்போடு எம்மைப் போஷிக்கும்
பெத்தேலின் தெய்வமே ;
முன்னோரையும் நடத்தினீர்
கஷ்ட இவ்வாழ்விலே .

2.கிருபாசன்முன் படைப்போம்
எம் ஜெபம் ஸ்தோத்ரமும் ;
தலைமுறையாத் தேவரீர்
எம் தெய்வமாயிரும் .

3.மயங்கும் ஜீவா பாதையில்
மெய்ப் பாதை காட்டிடும் ;
அன்றன்றுமே நீர் தருவீர்
ஆகாரம் வஸ்திரமும் .

4.இஜ்ஜீவிய ஓட்டம் முடிந்து,
பிதாவின் வீட்டினில்
சேர்ந்திளைப்பாருமளவும்
காப்பீர் உம் மறைவில் .

5.சிலுவை சுமந்தோராக
அவரைப் பின்பற்றுவோம் ;
தீரங்கொண்டு வீரராக
துன்பம் நிந்தை சகிப்போம்.

6.நேசர் தயவாய் நம்மோடு
சொல்லும் ஒரு வார்த்தையே ,
துக்கத்தை எல்லாம் கட்டோடு
நீங்கிப்போகச் செய்யுமே .

7.சாகும்பொது, திறவுண்ட
வானத்தையும் , அதிலே
மகிமையினால் சூழுண்ட
இயேசுவையும் காண்போமே .

8.வாழ்க, சிலுவையே ! வாழ்க
மோட்சத்தின் முன் தூதனே !
நீதிமான்கள் இளைப்பாற
நேர் வழியாம் வாசலே!

Wednesday, June 2, 2010

அலங்கார வாசலாலே

1.அலங்கார வாசளாலே
கோவிலுக்குள் போகிறேன் ;
தெய்வ வீட்டின் நன்மையாலே
ஆத்துமத்தில் பூரிப்பேன் ;
இங்கே தெய்வ சமுகம் ,
மெய் வெளிச்சம் , பாக்கியம்

2.கர்த்தரே ,உம்மண்டை வந்த
என்னண்டைக்கு வாருமேன் ,
நீர் இறங்கும்போதானந்த
இன்பத்தால் மகிழுவேன் ,
என்னுட இதயமும்
தெய்வ ஸ்தலமாகவும்.


3. பயத்தில் உம்மண்டை சேர,
என் ஜெபம் புகழ்ச்சியும்
நல்ல பலியாக ஏற
உமதாவியைக் கொடும்.
தேகம் ஆவி யாவையும்
சுத்தமாக்கியருளும்.

4. நல்ல நிலத்தில் விழுந்த
விதை பயிராகுமே ;
நானும் அவ்வாறே மிகுந்த
கனிகளைத் தரவே ,
வசனத்தைக் காக்க நீர்
ஈவளிக்கக் கடவீர் .

5.விசுவாசத்தை விடாமல்
அதில் பலப்படவும் ,
ஒருக்காலும் தவறாமல்
உம்மை நான் பின்செல்லவும்,
மெய் வெளிச்சத்தை நீரே
என்னில் வீசும் கர்த்தரே .

5. சொல்லும் , கர்த்தரே, நான் கேட்பேன்
நீர்இப்பாழ் நிலத்திலே
பெய்யப்பண்ணும் மன்னா சேர்ப்பேன்
நல்தியானத்துடனே ;
தாரும் ஜீவ பானத்தை,
தீரும் பசிதாகத்தை

1.அநாதியான கர்த்தரே ,

தெய்வீக ஆசனத்திலே

வானக்களுக்கு மேலாய் நீர்

மகிமையோடிருக்கிறீர்.

2. பிரதான தூதர் உம்முன்னே

தம் முகம் பாதம் மூடியே

சாஷ்டாங்கமாயப் பணிவார் ,

நீர் தூய தூயர் எண்ணுவார் .

அப்படியானால் , தூசியும்

சாம்பலுமான நாங்களும்

எவ்வாறு உம்மை அண்டுவோம் ?

எவ்விதமாய் ஆராதிப்போம் ?

நீரோ உயர்ந்த வானத்தில் ,

நாங்களோ தாழ்ந்த பூமியில்

இருப்பதால் , வணங்குவோம் ,

மா பயத்தோடு சேருவோம்

Monday, May 31, 2010

அஞ்சாதிரு என் நெஞ்சமே பாமாலை 328

1.அஞ்சாதிரு ,என் நெஞ்சமே ,
உன் கர்த்தர் துன்ப நாளிலே
கண் பார்ப்போம் என்கிறார் ;
இக்கட்டில் திகையாதிரு ,
தகுந்த துணை உனக்கு
தப்பாமல் செய்குவார்.

2. தாவீதும் யோபும் யோசேப்பும்
அநேக நீதிமான்களும்
உன்னிலும் வெகுவாய் .
கசதி அடைந்தும் ,பக்தியில்
வேரூன்றி ஏற்ற வேளையில்
வாழ்ந்தார்கள் பூர்த்தியாய் .

3.கருத்தாய் தெய்வ தயவை
எப்போ தும் நம்பும் பிள்ளையை
சகாயர் மறவார் ;
மேயபக்தி உன்னில் வேர்கொண்டால்
இரக்கமான கரத்தால்
அணைத்து பாலிப்பார் .

4.என் நெஞ்சமே ,மகிழ்ந்திரு
பேய் ,லோகம், துன்பம் உனக்கு
பொல்லாப்புச் செய்யாதே ;
இம்மானுவேல் உன் கன்மலை ,
அவர் மேல் வைத்த நம்பிக்கை
அபத்தம் ஆகாதே.