Showing posts with label த வரிசை பாடல்கள். Show all posts
Showing posts with label த வரிசை பாடல்கள். Show all posts

Saturday, June 5, 2010

தெய்வ ஆட்டுக்குட்டியே லோகத்தாரின்

1.தெய்வ ஆட்டுக்குட்டியே ,
லோகத்தாரின் மீட்பரே ,
உம்மால் மீட்கப்பட்ட நான்
தேவரீர்க்கு அடியான்;
நீர் என் கோட்டை தஞ்சமாம் ,
ஆர் என் வாழ்வை நீக்கலாம்?

2.உம்மைப் பற்றும் நேசத்தை ,
உம்மில் வைக்கும் பக்தியை
பேயும், கெட்ட லோகமும்
மூர்க்கமாய் விரோதிக்கும் ;
இன்பம் துன்பம் நித்தமே
கன்னியாக நிற்குமே .

3.கர்த்தரே , என் உள்ளத்தில்
அருள் தந்தென் மனதில்
அந்தகாரம் நீங்கிட ,
அன்பின் தீபம் ஸ்வாலிக்க,
ஆவியின் நல ஈவையும்
பூர்த்தியாக அளியும்.

4.எந்த நாழிகையிலே
நீர் வந்தாலும், இயேசுவே,
உம்மையே நான் சந்திக்க
கண்ணால் கண்டு களிக்க,
நான் விழித்திருக்கவே
நித்தம் ஏவியருளும்

Wednesday, June 2, 2010

தூய தூய தூயா! சர்வ வல்ல நாதா

1.தூய, தூய , தூயா! சர்வ வல்ல நாதா !
தேவரீர்க் கெந்நாளும் சங்கீதம் ஏறுமே ;
தூய, தூய, தூயா! மூவரான ஏகா!
காருணியரே, தூய திரியேகரே !

2.தூய, தூய, தூயா! அன்பர் சூழ நின்று
தெய்வ ஆசனமுன்னர் தம் கிரீடம் வைப்பரே ,
கேருபிம் சேராபிம் தாழ்ந்து போற்றப் பெற்று ,
இன்றென்றும் வீற்றாள்வீர் அநாதியே !

3.தூய, தூய, தூயா ! ஜோதி பிரகாசா
பாவக் கண்ணால் உந்தன் மாண்பைக் காண யார் வல்லோர் ?
நீரே தூய தூயர் , மனோவாக்குக் கெட்டா
மாட்சிமை ,தூய்மை ,அன்பும் நிறைந்தோர் .

4. தூய, தூய, தூயா! சர்வ வல்ல நாதா !
வானம் பூமி ஆழி உம்மை ஸ்தோத்தரிக்குமே;
தூய, தூய, தூயா! மூவரான ஏகா!
காருணியரே , தூய திரியேகரே!