Showing posts with label ப வரிசை பாடல்கள். Show all posts
Showing posts with label ப வரிசை பாடல்கள். Show all posts

Saturday, June 5, 2010

பிளவுண்ட மலையே புகலிடம் இதுவே

1.பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே;
பக்கம் பட்ட காயமும் ,பாய்ந்த செந்நீர் வெள்ளமும்
பாவதோஷம் யாவையும் நீக்கும்படி அருளும்.

எந்த கிரியை செய்துமே, உந்தன் நீதி கிட்டாதே
கண்ணிர் நித்தம் சொரிந்தும் கஷ்ட தவம் புரிந்தும் ,
பாவம் நீங்க மாட்டாதே ;நீரே மீட்பர் இயேசுவே.

யாதுமற்ற ஏழை நான் , நாதியற்ற நீசன் நான் ;
உம சிலுவை தஞ்சமே , உந்தன் நீதி ஆடையே ;
தூய ஊற்றை அண்டினேன் .தூய்மையாக்கேல் மாளுவேன் .

நிழல் போன்ற வாழ்விலே , கண்ணை மூடும் சாவிலே ,
கண்ணுக்கெட்டா லோகத்தில் , நடுத்தீர்வை தினத்தில் ,
பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே

Tuesday, June 1, 2010

பிதா சுதன் ஆவியே

1.பிதா சுதன் ஆவியே
ஏகரான ஸ்வாமியே ,
கேளும் நெஞ்சின் வேண்டலை ,
தாரும் சமாதானத்தை ;
அன்புக்கேற்ற உணர்வும்
அன்னியோன்னிய ஐக்கியமும்
ஈந்து ஆசிர்வதியும் ,
திவ்ய நேசம் ஊற்றிடும்

2.உந்தன் அடியாரை, நீர்
ஒரே மந்தையாக்குவீர் ;
விசுவாசமும் ஒன்றே ;
ஒன்றே எங்கள் நம்பிக்கை ;
ஐக்கியமாக்கி எங்களை
ஆண்டு கொள்ளும் கர்த்தரே ,
ஏக சிந்தை தாருமே.

3.மீட்டுக் கொண்ட ஆண்டவா ,
அன்னியோன்னிய காரணா
ஜீவ நேசா ,தேவரீர்
வேண்டல் கேட்டிரங்குவீர்;
பிதா சுதன் ஆவியே,
ஏகரான ஸ்வாமியே ,
உந்தன் திவ்விய ஐக்கியமும்
தந்து ஆட்கொண்டருளும் .

Thursday, May 27, 2010

பாதை காட்டும் மா யெகோவா பாமாலை 324

1.பாதை காட்டும் மா யெகோவா,

பரதேசியான நான்

பலவீனன், அறிவீனன் ,

இவ்வுலோகம் காடு தான்,

வானாகரம்

தந்து என்னைப் போஷியும்.



2.ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றை

நீர் திறந்து தாருமேன் ;

தீப மேக ஸ்தம்பம் காட்டும்.

வழியில் நடத்துமேன் ;

வல்ல மீட்பர் !

என்னைத் தாங்கும், இயேசுவே.



3.சாவின் அந்தகாரம் வந்து

என்னை மூடும் நேரத்தில்

சாவின் மேலும் வெற்றித் தந்து ,

என்னை சேர்ப்பீர் மோட்சத்தில் ;

கீத வாழ்த்தல்

உமக்கென்றும் பாடுவேன் .