Tuesday, December 15, 2009

கர்த்தாவே யுகயுகமாய்

கர்த்தாவே யுகயுகமாய்
எம் துணை ஆயினீர் ;
நீர் இன்னும் வரும் காலமாய்
எம் நம்பிக்கை ஆவீர் .

உம ஆசனத்தின் நிழலே
பக்தர் அடைக்கலம் ;
உம வன்மையுள்ள புயமே
நிச்சய கேடகம் .

பூலோகம் உருவாகியே
மலைகள் தோன்றுமுன்
சுயம்புவாய் என்றும் நீரே
மாறா பராபரன் .


ஆயிரம் ஆண்டு உமக்கு
ஓர் நாளைப் போலாமே ;
யுகங்கள் தேவரீருக்கு
ஓர் இமைக்கொப்பாமே

சாவுக்குள்ளான மானிடர்
நிலைக்கவே மாட்டார் ;
உலர்ந்த பூவைப்போல் அவர்
உதிர்ந்து போகிறார் .

கர்த்தாவே யுகயுகமாய்
எம் துணை ஆயினீர் ;
இக்கட்டில் நற் சகயராய்
எம் நித்ய வீதாவீர்

எழுதியவர்
ஐசக் வாட்ஸ்

.காரிருளில் என் நேச தீபமே

1.காரிருளில் என் நேச தீபமே ,
நடத்துமேன் ;
வேறொளியில்லை; வீடும் தூரமே ,
நடத்துமேன் ;
நீர் தாங்கின் தூர காட்சி ஆசியேன் :
ஓர் அடி மட்டும் என் முன் காட்டுமேன் .

2. என் இஷ்டப்படி நடந்தேன் ஐயோ !
முன்னாளிலே ;
ஒத்தாசை தேடவில்லை இப்போதோ
நடத்துமே;
உல்லாசம் நாடினேன் திகிலிலும்
வீம்பு கொண்டேன் அன்பாக மன்னியும்

3. இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தீர் ;
இனிமேலும்
காடாறு சேறு குன்றில் தேவரீர்
நடத்திடும் ;
உதய நேரம் வரக் கழிப்பேன்
மறைந்து போன நேசரைக் காண்பேன்

எழுதியவர் ஜான் .H. நியூமன்

ஓ பெத்லகேமே சிற்றூரே

ஓ பெத்லகேமே சிற்றூரே,
என்னே உன் அமைதி !
அயர்ந்த நித்திரை செய்கையில்
ஊர்ந்திடும் வான் வெள்ளி,
வின் வாழ்வின் ஜோதி தோன்றிற்றே
உன் வீதியில் இன்றே ;
நல்லோர் நாட்டம் பொல்லார் கோட்டம்
உன் பாலன் இயேசுவே.

கூறும் ஓ விடி வெள்ளி காள்!
இம்மைந்தன் ஜென்மமே !
விண்வேந்தர்க்கு மகிமையே ,
பாரில் அமைதியாம் ;
மா திவ்விய பாலன் தோன்றினார்
மண்மாந்தர் தூக்கத்தில் ,
விழித்திருக்க தூதரும்
அன்போடு வானத்தில்

அமைதியாய் அமைதியாய்
விண் ஈவு தோன்றினார் ;
மாந்தர்க்கு ஸ்வாமி ஆசியும்
அமைதியால் ஈவார் .
கேளாதே அவர் வருகை
இப்பாவ லோகத்தில்;
மெய் பக்தர் ஏற்பார் ஸ்வாமியை
தம் சாந்த ஆன்மாவில் .

வேண்ட நற் சிறு பாலரும்
இத்தூய பாலனை,
அழைக்க ஏழை மாந்தரும்
இக்கன்னி மைந்தனை
விஸ்வாசமும் நம் பாசமும்
வரவைப் பார்க்கவே,
இராவை நீக்கித் தோன்றுவார்
இம்மாட்சி பாலனே !

பெத்லேகேம் தூய பலனே,
இறங்கி வருவீர்!
ஜனிப்பீர் எங்களில் இன்றும்
எம் பாவம் நீக்குவீர் ;
நற்செய்தி இவ்விழா தன்னில்
இசைப்பார் தூதரே ;
ஆ வாரும், வந்து தங்கிடும்
இம்மனுவேலரே .

எழுதியவர்

பிலிப்ஸ் ப்ருக்ஸ்

Thursday, November 12, 2009

உன்னதரே நீர் மகிமை பாமாலை 4

1.உன்னதரே நீர் மகிமை,
இந்நிலம் சமாதானத்தை
அடைய அன்பு ஓங்க!
பரபரனார் கர்த்தாவே ,
பரம ராஜர் பார்த்தாவே,
வல்லமை தந்தாய், வாழ்க !
தாழ்ந்து வீழ்ந்து ,
போற்றுவோமே புகழ்வோமே
தொழுவோமே;
மாட்சி மேன்மைகென்றும்
ஸ்தோத்ரம் .

2.பிதாவின் ஒரே மைந்தனே
சுதாவே கர்த்தா ராஜரே,
தெய்வாட்டுக்குட்டி நீரே :
பார் மாந்தர் போக்கிடும்,
மா தந்தை பக்கல் ஆண்டிடும்
மகத்துவ கிறிஸ்து நீரே ;
கேட்பீர் ஏற்பீர்
ஏழை நீசர் எங்கள் ஜெபம் தாழ
வாம் வேண்டல் ;
இறங்குவீர் தயவாவடே .

3.நீர் தூயர் தூயர் தூயரே
நீர் கர்த்தர் கர்த்தர் கர்த்தரே ,
என்றென்றும் ஆள்வீர் நீரே;
பிதாவின் ஆசனத்திலே
மேதையாய் வீற்றுப் பாங்கினில்
கர்த்தாவாம் ஆவியோடே
இன்றும் என்றும்
ஏக மாண்பு ஏக மாட்சி ஏக
மேன்மை
தாங்கி ஆள்வீர் தேவரீரே .

Monday, November 9, 2009

உம்மைத் துதிக்கிறோம்

பாமாலை 2
1. உம்மைத் துதிக்கிறோம் ,யாவுக்கும் வல்ல பிதாவே ;
உம்மைப் பணிகிறோம் ஸ்வாமீ, ராஜாதி ராஜாவே;
உமது மா மகிமைக்காக கர்த்தா ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே .

2.கிறிஸ்துவே, இரங்கும் சுதனே, கடன் செலுத்தி,
லோகத்தின் பாவத்தை நீக்கும் தெய்வாட்டுக்குட்டி,
எங்கள் மனு கேளும் பிதாவினது ஆசனத் தோழா இரங்கும்.

3. நித்திய பிதாவின் மகிமையில் ஏசுவே
நீரே பரிசுத்தாவியோடேகமாய் ஆளுகிறீரே.
ஏகமாய் நீர் அர்சிக்கப்படுகிறீர்.உன்னத கர்த்தரே ஆமேன்

Sunday, November 8, 2009

ஆத்மமே, உன் ஆண்டவரின்

பாமாலை 1
1. ஆத்மமே, உன் ஆண்டவரின்
திருப்பாதம்பணிந்து,
மீட்பு, சுகம், ஜீவன், அருள்
பெற்றதாலே துதித்து,
அல்லேலுயா , என்றென்றைக்கும்
நித்திய் நாதரைப் போற்று.

2 .நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற
தயை நன்மைக்காய்த் துதி:
கோபங்கொண்டும் அருள் ஈயும்
என்றும் மாறாதோர் துதி :
அல்லேலுயா , அவர் உண்மை
மா மகிமையாம் துதி

3. தந்தைபோல் மா தயை உள்
ள்ளோர்;நீச மண்ணோர் நம்மையே
அன்பின் கரம்கொண்டு தாங்கி
மாற்றார் வீழ்த்திக் காப்பாரே;
அல்லேலுயா , இன்னும் அவர்
அருள் விரிவானதே .
4. என்றும் நின்றவர் சமுகம்
போற்றும் தூதர் கூட்டமே;
நாற்றிசையும் நின்றெழுந்து
பணிவீர் நீர் பக்தரே ;
அல்லேலுயா , அனைவோரும்
அன்பின் தெய்வம் போற்றுமே