Thursday, September 13, 2012

சுத்த ஆவி என்னில் தங்கும் , நானும் சுத்தன் ஆகவே :

1.சுத்த ஆவி என்னில் தங்கும் , நானும் சுத்தன் ஆகவே :
   பாவ அழுக்கெல்லாம் நீக்கும் ;உம ஆலயமாகவே
   என்னை நீர் சிங்காரியும் வாசம் பண்ணும்  நித்தமும் 

2. சத்திய ஆவி, என்னில் தங்கும் , நானும் சத்யன் ஆகவே :
   தெய்வ பக்தி என்னில் முற்றும் வளர்ந்தேறச் செய்யுமே :
   நீர் என்னில் பிரவேசியும் , ஆண்டு கொள்ளும் நித்தமும் .

3. நேச ஆவி , என்னில் தங்கும் நானும் நேசன் ஆகவே :
   துர்ச் சுபாவம் போகப் பண்ணும் : அன்பில் நான் வேரூன்றவே
   அன்பின் ஸுவாலை எழுப்பும் , மென் மேலும் வளர்ந்திடும். 

4. வல்ல ஆவி என்னில் தங்கும் ; நானும் வல்லோன் ஆகவே ;
   சாத்தான் என்னை தூண்டிவிடும்  போது  ஜெயங் கொள்ளவே
   நீர் என் பக்கத்தில் இரும் என்னை பலப்படுத்தும்.

5. நல்ல ஆவி என்னில் தங்கும்  நானும் நல்லோன் ஆகவே ;
   பகை மேட்டிமை , விரோதம் மற்றும் தீமை யாவுமே
   என்னை விட்ட கற்றுமேன், என்னை  சீர்ப்படுத்துமேன்

 

யாரை நான் புகழுவேன் யாரை நான் அறிகிறேன்

  1. யாரை நான் புகழுவேன் யாரை நான் அறிகிறேன் ?
          என் கதியும் பங்கும் யார் , நான் பாராட்டும் மேன்மை யார்?
          தெய்வ ஆட்டுக்குட்டி தான்.
     2. யார் நான் நிற்கும் கன்மலை , யார் என் திட நம்பிக்கை ?
         குற்றத்தை சுமந்தோர் யார் , தெய்வ நேசம் தந்தோர் யார் ?
         தெய்வ ஆட்டுக்குட்டி தான்.
     3. எந்தன் எந்தன் பிராண பெலன் யார், ஆத்துமத்தின் சாரம் யார் ?
         யாரால் பாவி நீதிமான், யாரால் தெய்வ பிள்ளை நான்?
         தெய்வ ஆட்டுக்குட்டியால் .
      4. கஸ்தியில் சகாயர் யார்,சாவின் சாவு ஆனோர் யார் ?
          என்னை தூதர் கூட்டத்தில்,சேர்ப்போர் யார் நான் சாகையில்?
         தெய்வ ஆட்டுக்குட்டி தான்.
      5. இயேசு தான் என் ஞானமே , அவர் என் சங்கீதமே :
         நீங்களும் புகழுங்கள் , அவரைப் பின் செல்லுங்கள்
         தெய்வ ஆட்டுக்குட்டியை .