Thursday, September 13, 2012

சுத்த ஆவி என்னில் தங்கும் , நானும் சுத்தன் ஆகவே :

1.சுத்த ஆவி என்னில் தங்கும் , நானும் சுத்தன் ஆகவே :
   பாவ அழுக்கெல்லாம் நீக்கும் ;உம ஆலயமாகவே
   என்னை நீர் சிங்காரியும் வாசம் பண்ணும்  நித்தமும் 

2. சத்திய ஆவி, என்னில் தங்கும் , நானும் சத்யன் ஆகவே :
   தெய்வ பக்தி என்னில் முற்றும் வளர்ந்தேறச் செய்யுமே :
   நீர் என்னில் பிரவேசியும் , ஆண்டு கொள்ளும் நித்தமும் .

3. நேச ஆவி , என்னில் தங்கும் நானும் நேசன் ஆகவே :
   துர்ச் சுபாவம் போகப் பண்ணும் : அன்பில் நான் வேரூன்றவே
   அன்பின் ஸுவாலை எழுப்பும் , மென் மேலும் வளர்ந்திடும். 

4. வல்ல ஆவி என்னில் தங்கும் ; நானும் வல்லோன் ஆகவே ;
   சாத்தான் என்னை தூண்டிவிடும்  போது  ஜெயங் கொள்ளவே
   நீர் என் பக்கத்தில் இரும் என்னை பலப்படுத்தும்.

5. நல்ல ஆவி என்னில் தங்கும்  நானும் நல்லோன் ஆகவே ;
   பகை மேட்டிமை , விரோதம் மற்றும் தீமை யாவுமே
   என்னை விட்ட கற்றுமேன், என்னை  சீர்ப்படுத்துமேன்

 

யாரை நான் புகழுவேன் யாரை நான் அறிகிறேன்

  1. யாரை நான் புகழுவேன் யாரை நான் அறிகிறேன் ?
          என் கதியும் பங்கும் யார் , நான் பாராட்டும் மேன்மை யார்?
          தெய்வ ஆட்டுக்குட்டி தான்.
     2. யார் நான் நிற்கும் கன்மலை , யார் என் திட நம்பிக்கை ?
         குற்றத்தை சுமந்தோர் யார் , தெய்வ நேசம் தந்தோர் யார் ?
         தெய்வ ஆட்டுக்குட்டி தான்.
     3. எந்தன் எந்தன் பிராண பெலன் யார், ஆத்துமத்தின் சாரம் யார் ?
         யாரால் பாவி நீதிமான், யாரால் தெய்வ பிள்ளை நான்?
         தெய்வ ஆட்டுக்குட்டியால் .
      4. கஸ்தியில் சகாயர் யார்,சாவின் சாவு ஆனோர் யார் ?
          என்னை தூதர் கூட்டத்தில்,சேர்ப்போர் யார் நான் சாகையில்?
         தெய்வ ஆட்டுக்குட்டி தான்.
      5. இயேசு தான் என் ஞானமே , அவர் என் சங்கீதமே :
         நீங்களும் புகழுங்கள் , அவரைப் பின் செல்லுங்கள்
         தெய்வ ஆட்டுக்குட்டியை .
        
        
       

Sunday, January 23, 2011

கர்த்தரே தற்காரும்

கர்த்தரே தற்காரும், ஆசீர்வாதம் தாரும் ,
எங்கள் மேல் உம் முகத்தை வைத்து வீசும் ஒளியை .
எங்களுக்கன்றன்று சமாதானம் தந்து
கிறிஸ்துவைக் காட்டிப் போதிக்கும் உமதாவியைக் கொடும்
எங்கள் மீட்பரான இயேசுவின் மேலான
நாமத்துக்கு மகிமை ; ஆமென் , கேட்பீர் ஜெபத்தை.

கர்த்தர் தந்த ஈவுக்காக

கர்த்தர் தந்த ஈவுக்காக என்றென்றைக்கும் தோத்திரம்!
விண்ணோர் மண்ணோர் கூட்டமாக பாடுவார் சங்கீர்த்தனம்
மீட்கப்பட்ட யாவராலும் ஏக தேவரீருக்கே
ஆரவாரமாய் என்றைக்கும் தோத்திரம் உண்டாகவே

எல்லா நன்மைக்கும் காரணா!

எல்லா நன்மைக்கும் காரணா!
எல்லாரும் போற்றும் ஆரணா!
நல்ல நாதா! வல்ல வேந்தா !
பொல்லாப்பைப் போக்கும் பேர் மன்னா!
பலகோடி நன்றி பூரணா!
அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா!

என் ஜீவன் போகும் நேரம் பாமாலை 394

1.என் ஜீவன் போகும் நேரம் சமீபம் வந்ததே ;
பேரின்ப அருணோதயம் , இதோ! விடிந்ததே ;
ராக் கால மோசம் நீங்கும் வின் சுடரொளியில் ;
மா அருள் ஜோதி வீசும் பேரின்ப தேசத்தில்.

2.ஆ, நேச ஜீவ ஊற்று என் அருள் நாதரே !
ஈண்டுண்ணும் ஜீவ தண்ணீர் அங்காழி போலாமே ;
பேரன்பின் பெருவெள்ளம் பாய்ந்தோடும் மோட்சத்தில் ;
மா அருள் ஜோதி வீசும் பேரின்ப மோட்சத்தில்;

3. அன்போடும் நீதியோடும் என் சுக துக்கமும்
ஆண்டென்னைப் பாதுகாத்து வந்தார் எந்நேரமும் ;
ஆ! போற்றுவேன் தெய்வன்பை ஆனந்த கடலில் ;
மா அருள் ஜோதி வீசும் பேரின்ப தேசத்தில் .

4. நல் நித்திரை செய்து பின்பு மாசற்றெழும்புவேன் ;
என் மீட்பரை நான் கண்டு ஆனந்தம் அடைவேன் ;
ராஜாதி ராஜன் என்னை அழைக்கும் நேரத்தில்
மா அருள் ஜோதி வீசும் பேரின்ப தேசத்தில் .

5. தன் ஆடையைப் பாராமல் பர்த்தாவின் முகத்தை
பத்தினி நோக்குமாறு , நான் ஜீவ கீரடத்தை
நோக்காமல் , மீட்பர் மாண்பை பார்ப்பேன் அவ்வேளையில் ;
இம்மானுவேலே ஜோதி பேரின்ப தேசத்தில்

எல்லாருக்கும் மா உன்னதர் கர்த்தாதி பாமாலை 261

1. எல்லாருக்கும் மா உன்னதர், கர்த்தாதி கர்த்தரே ,
மெய்யான தெய்வ மனிதர் , நீர் வாழ்க, இயேசுவே .

2.விண்ணில் பிரதானியான நீர் பகைஞர்க்காகவே ,
மண்ணில் இறங்கி மரித்தீர்; நீர் வாழ்க, இயேசுவே

3.பிசாசு, பாவம், உலகை உம் சாவால் மிதித்தே,
ஜெயித்தடைந்தீர் வெற்றியை; நீர் வாழ்க ,இயேசுவே

4.நீர் வென்றபடி நாங்களும் வென்றேறிப் போகவே ;
பரத்தில் செங்கோல் செலுத்தும் நீர் வாழ்க , இயேசுவே.

5.விண்ணோர்களோடு மண்ணுள்ளோர் என்றைக்கும் வாழவே ,
பரம வாசல் திறந்தோர் நீர் வாழ்க, இயேசுவே.